பரமக்குடி-பரமக்குடியில் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ. 17 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
பரமக்குடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை ஆறு சர்வீஸ் ரோடு மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக திரிந்த 17 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
தொடர்ந்து இவற்றை நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டி வைத்தனர்.
மேலும் நாள் முழுவதும் மாடு உரிமையாளர்கள் வராததால் நகராட்சி கமிஷனர் திருமால் செல்வம், சுகாதார அலுவலர் ஜெயராமன் உள்ளிட்டோர் ஏலம் விடப் போவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் மாட்டு உரிமையாளர்கள் அதனை தேடி வந்த நிலையில், ஒவ்வொரு மாட்டிற்கும் தலா ரூ. 1000 வீதம் 17 மாடுகளுக்கும் 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தொகையை செலுத்திய பின் விடுவித்தனர்.