பெரியபட்டினம்-பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் பாதுகாப்பு கருதி பொருத்தப்பட்டிருந்த எட்டு சி.சி.டி.வி.,கேமராக்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது. அரசுப் பள்ளி மற்றும் பொது சொத்துக்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு, சுய ஒழுக்கம் சம்பந்தமான நல்லொழுக்க போதனை வகுப்பு பள்ளியில் நடந்தது.
கீழக்கரை டி.எஸ்.பி., சுபாஷ் தலைமை வகித்தார். மகளிர் இன்ஸ்பெக்டர் ராதா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் தபசுமுத்து வரவேற்றார்.
இன்ஸ்பெக்டர் பாலமுரளி, ஊராட்சி தலைவர் அக்பர் ஜான்பீவி, துணைத்தலைவர் புரோஸ்கான், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் பாத்திமா, பெரியபட்டினம் ஜமாத் நிர்வாகி அன்சார் அலி உட்பட பலர் பங்கேற்றனர். கணித ஆசிரியர் முத்துக்குமார் தொகுத்து வழங்கினார்.