தொண்டி-தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று பெற்றோர் சங்க தலைவர் தேர்தல் நடந்தது. தலைவர் பதவிக்கு கண்ணன், மைதீன் ஆகிய இருவரும் போட்டியிட்டனர். தேர்தல் அலுவலராக தலைமை ஆசிரியர் சேசுரெத்தினம் நியமிக்கப்பட்டு தேர்தலை நடத்தினார். 496 பேரில் 62 பேர் ஓட்டளித்தனர்.
தனித்தனியே பெட்டி வைக்கப்பட்டு வேட்பாளர்கள் பெயர்களில் முத்திரையிட்டு ஓட்டு போட்டனர். நேற்று மதியம் 3:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப் பதிவு, 3:30 வரை நடந்தது. இதில் 37 ஓட்டுகள் பெற்று கண்ணன் வெற்றி பெற்றார். மைதீனுக்கு 23 ஓட்டுகள் கிடைத்தது. 2 ஓட்டு செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. துணை தலைவராக ரபீக்ராஜா போட்டியின்றி தேர்ந்தெடுக்கபட்டார்.