உத்தரகோசமங்கை--- உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி, மாலங்குடி, பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மழையின்றி நெற்பயிர் கருகியதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.
அவருடன் கீழக்கரை தாசில்தார் சரவணன், துணை தாசில்தார் பழனிக்குமார், ஆர்.ஐ., பகவதி, வி.ஏ.ஓ., ரமேஷ் உட்பட ஏராளமான விவசாயிகள் உடனிருந்தனர். பின்னர் உத்தரகோசமங்கையில் பிரதமரின் நிதியில் இருந்து கட்டப்படும் இலவச வீடுகளை ஆய்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement