ராமநாதபுரம்-ராமநாதபுரம் அரசு மகளிர் கலை கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சுமதி தலைமை வகித்தார். மாணவிகள் புதுப்பானையில் பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள் கொத்து படைத்து கதிரவனை வழிப்பட்டனர்.
தமிழ்துறை தலைவர் கீதா மாணிக்க நாச்சியார், பேராசிரியர் முத்தாலேஸ்வரி, துறை தலைவர்கள், மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
*- ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் உள்ள அன்னை கொலாஸ்டிகா பெண்கள் கல்லூரியில் மாணவிகள் சமத்துவ பொங்கல் சமைத்து பொங்கல் விழா கொண்டாடினர். முதல்வர் ஆனிபெர்பெட் சோபி தலைமை வகித்தார். துணை முதல்வர் கொரற்றி பேசினார்.
விழாவில் மாணவிகளின் பாரம்பரிய நடனம், கும்மி, கோலாட்டம், உறியடித்தல், கயறு இழுத்தல், இசை விளையாட்டு உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.