சிங்கம்புணரி-சிங்கம்புணரியில் வி.ஏ.ஓ., அலுவலகத்தை தேடி மக்கள் அலைவது பரிதாபமாக உள்ளது.
இப்பேரூராட்சியில் வட சிங்கம்புணரி வி.ஏ.ஓ., அலுவலகம் சிறுவர் பூங்கா கரையில் செயல்பட்டு வந்தது. இக்கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டதால் அருகே வாடகை கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள தாலுகா அலுவலக ஜீப் நிறுத்தும் வளாகத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் செயல்படுகிறது. பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ., தூரத்திற்கு மேல் உள்ளதால் சிங்கம்புணரி மற்றும் அருகே உள்ள கிராம மக்கள் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு செல்ல சிரமப்படுகின்றனர்.
நிரந்தர கட்டடம் கட்டப்படும் வரை நகர் பகுதிக்குள் பொதுமக்கள் சுலபமாக வந்து செல்லும் வகையில் தற்காலிக அலுவலகம் செயல்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்