சாலைக்கிராமம்-சாலைக்கிராமம் அருகே வடக்கு சாலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கையா இவர் சாலைக்கிராமம் கண்மாய்க்கரை ரோட்டில் மனைவி காளியம்மாளுடன் 70, வசித்து வருகிறார்.
சங்கையா தேவகோட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் நேற்று முன்தினம் இரவு காளியம்மாள் மட்டும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கியுள்ளார்.
நள்ளிரவு 1:00 மணிக்கு அடையாளம் தெரியாத இருவர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே தூங்கிக் கொண்டிருந்த காளியம்மாளை தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.