நாகர்கோவில்: ''காங்கிரஸ் ஒரு 'காமெடி பீஸ்' கட்சி. அதனால் அந்த கட்சி சொல்வதை யாரும் மதிப்பதில்லை,'' என்று நடிகை குஷ்பு கூறினார்.
கன்னியாகுமரியில் அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கவர்னர் விவகாரத்தில், தமிழகத்தில் எல்லாமே தவறாகத் தான் இருக்கிறது. தி.மு.க., அரசை மேற்பார்வையிடுவதற்கும், தவறு நடக்கும்போது தட்டிக்கேட்கவும் கவர்னர் இருக்கிறார்.
சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே போகும்போது, அமைச்சர் பொன்முடி, 'போய்யா' என கைகாட்டுகிறார்; பொன்முடி செய்தது பெரிய தவறு. இதற்கு முன், பஸ்சில் பெண்கள் 'ஓசி'யில் போவதாக பொன்முடி சொன்னார்.
'தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை' என காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி சொல்லி இருக்கிறார். அவருக்கு எதிராக ஏன் கோஷம் போடவில்லை? காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ் கட்சி. அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.