மதுரை -மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் மதுரை பெட்கிராட் நிறுவனத்தில் நடந்த பெண்களுக்கான இலவச தையல்பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி நிறைவில் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
பொதுச் செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாராள் ரூபி, நிர்வாகி ராஜசேகரன் முன்னிலை வகித்தனர்.
வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட அலுவலர் காளிதாசன் உபகரணங்களை வழங்கினார். உதவி திட்ட அலுவலர்கள் சின்னதுரை, வெள்ளப்பாண்டி கலந்துகொண்டனர்.
துணைத்தலைவர் மார்டின் லுாதர் கிங் நன்றி கூறினார்.