மதுரை -மதுரை மாநகராட்சி பகுதி காலி பிளாட்டுகளை பராமரிக்காத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
மாநகராட்சி தெருக்களில் பல காலி பிளாட்டுகள் உள்ளன. அதில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.
அருகில் வசிப்போர் தங்கள் வீட்டு கழிவுநீரை காலி பிளாட்டில் தான் திறந்து விடுகின்றனர். சதுப்பு நிலம் போல மாறியுள்ள புதருக்குள் நாய்களும், பன்றிகளும் கூடி கும்மாளம் போடுகின்றன. இரவில் முட்புதர்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடுகிறது.
பெரும்பாலான பிளாட்டுகள் குப்பை கொட்டும் இடமாக உள்ளது.
இதனால் பெரும் சுகாதார கேடு ஏற்படுகிறது. காலி பிளாட்டுகளை பராமரிக்காத உரிமையாளர்கள், குப்பை கொட்டி, கழிவு நீரை திறந்து விடுபவர்களை மாநகராட்சி அதிகாரிகள் கண்டறிய வேண்டும். அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வார்டுதோறும் ஊழியர்கள் குழுவை மாநகராட்சி உருவாக்க வேண்டும்.