மதுரை-மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்த ரெடிமேட் சட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இச்சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். ஆபீஸ் கவர், மருத்துவ பேண்டேஜ், பேக்கரி தொழில் செய்து கைதிகள் வருவாய் ஈட்டுகின்றனர்.
தீபாவளிக்கு இனிப்பு, கார வகைகளையும், நவராத்திரிக்கு கொலு பொம்மைகள், விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைகளை தயாரித்து விற்றனர்.தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டி.ஜி.பி., ஆபாஷ்குமார் உத்தரவுபடி ரெடிமேட் சட்டைகளை தயாரித்து சிறை அங்காடியில் ரூ.300முதல் ரூ.550 வரை விற்கின்றனர்.