மதுரை -மதுரை கிழக்கு ஒன்றியம் மீனாட்சி நகர் நடுநிலைப்பள்ளி சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் அல்லிமுத்து, வட்டார கல்வி அலுவலர்கள் ஜான்சி, எஸ்தர் இந்திராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துக்குமரன், ஆசிரியர்கள், 467 மாணவர்கள் பங்கேற்றனர். கல்வி விழிப்புணர்வு குறித்து கோஷங்கள் எழுப்பி, பதாகைகள் ஏந்தி செல்லப்பட்டது.
கொட்டாம்பட்டி : வட்டார வள மையம், புதிய வயது வந்தோர் கல்வி இயக்கம் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துச்சாமி, ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, ஆரோக்கியராஜ், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சாந்தி, சித்ராஹெலன், ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.