அலங்காநல்லுார்- -மதுரை மாவட்டம் அலங்காநல்லுார் தெப்பகுளத்தில் தேனி லோக்சபா தொகுதி எம்.பி., நிதி ரூ.8 லட்சத்தில் உயர்கோபுர மின்விளக்கு சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
இதன் திறப்பு விழாவிற்கு அ.தி.மு.க., எம்.பி., ரவீந்திரநாத் நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது எரிந்த மின் விளக்கை அணைக்க சொல்லி இருட்டில் மீண்டும் அவரே 'ஆன்' செய்த பின் விளக்கு கீழிருந்த கல்வெட்டை திறந்து வைத்து வாடிவாசலை பார்வையிட்டார்.