மதுரை-மதுரையில் வட்டாரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலை போக்குவரத்து வாரவிழா நிகழ்ச்சி துவங்கியது.
வாடிப்பட்டியில் மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலை வழியாக பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களிடம் மதுரை இணை போக்குவரத்து கமிஷனர் பொன் செந்தில்நாதன் தலைமையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா முன்னிலையில் விபத்து தவிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சிட்டம்பட்டி பகுதியில் தெற்கு வட்டார போக்குவரதது அலுவலர் சிங்காரவேலு தலைமையில் கனரக வாகன ஓட்டுநர்களிடம் இரவில் தேநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தெப்பக்குளத்தில் சவுராஷ்டிர பள்ளி மாணவர்களிடம் தலைமையாசிரியை துர்காதேவி முன்னிலையில் வட்டார போக்குவரத்து அலுவலர் சித்ரா, மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல் டூவீலர்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது, கார்களில் சீட்பெல்ட் அணிவது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஒத்தக்கடையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
திருமங்கலம் பகுதியில் வாகனத்தின் பின்புறம் சிவப்பு விளக்கு மற்றும் சிவப்பு ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.