வெளிமாநிலங்களில் இருந்து மதுரை வரும் லாரி, ஆம்னி பஸ்களிலும் பல்வேறு கடைகளின் கோடவுன்களிலும் உணவு பாதுகாப்பு துறை, போலீசார் இணைந்து சோதனை நடத்துவர். மதுரையில் கடந்தாண்டு ஏப்., முதல் டிச., வரை நடத்தப்பட்ட சோதனையில் 2964.573 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.17.46 லட்சம் என மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கடை, கோடவுன், பஸ் அல்லது லாரிகளில் 2 கிலோவுக்கு மேற்பட்ட ஒரே வகையான புகையிலை பொருட்களை கைப்பற்றினால் அவற்றை மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்புவோம். அதன்பின் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். 2 கிலோவுக்கும் குறைவாக வைத்து விற்ற கடைகளுக்கு முதல் முறை ரூ.5000 அபராதம் விதிக்கிறோம். 2ம் முறையும் தவறு செய்தால் ரூ.10ஆயிரம் அபராதம். தவறு தொடர்ந்தால் விற்பனை வளாகம் சீலிடப்படும். 2022, ஏப்., முதல் டிச., வரை 274 கடைகளுக்கு ரூ.5000 வீதம் ரூ.13.70லட்சம் அபராதம் விதித்துள்ளோம். 26 கடைகளை மூடியுள்ளோம். இந்தாண்டு ஜன.,1 முதல் நேற்று வரை 3 கடைகள் உட்பட 29 கடைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.
வீடு, பள்ளி, கல்லுாரி, அலுவலகங்கள் அருகே புகையிலை பொருட்களை விற்றால் 94440 42322 வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம், என்றார்.
மதுரை, ஜன. 13 -
மதுரையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 29 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 2022 ஏப்., முதல் டிச., வரை 3000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.