மதுரை-மதுரையில் ஜன.,15 முதல் 17 வரை நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுகளை பிடிப்பதற்கான முன்பதிவில் நேற்று மாலை 5:00 மணி வரை 5399 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
ஜன.,15 ல் அவனியாபுரம், 16ல் பாலமேடு, 17ல் அலங்காநல்லுாரில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடுபிடி வீரர்கள் madurai.nic.in இணைய தளத்தில் ஜன.,10 மதியம் 12:00 முதல் ஜன.,12 மாலை 5:00 மணி வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர். 3 நாட்களில் 5399 பேர் பதிவு செய்தனர். 9699 பேர் காளைகளை களத்தில் இறக்க முன்பதிவு செய்தனர். பதிவு செய்தவர்களின் சான்று சரிபார்க்கப்பட்ட பின் தகுதியான நபர்கள் மட்டும் அனுமதி டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க முடியும்.