கொட்டாம்பட்டி- கருங்காலக்குடியில் வடக்கு மண்டல் பா.ஜ., சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.
மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் கெயின்பிரபு, தெற்கு மண்டல் தலைவர் ராஜராஜன், மண்டல பொறுப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெருங்குடி
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி இளைஞர் நலத்துறை சார்பில் சொற்பொழிவு நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மீனா வரவேற்றார். நேதாஜி சுவாமிநாதன் பேசுகையில், 'இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் சமுதாய உணர்வுடன் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும்' என்றார். உதவி பேராசிரியர் ரேணுகாதேவி நன்றி கூறினார்.
சோழவந்தான்
திருவேடகம் விவேகானந்த கல்லுாரி விழாவிற்கு செயலர் வேதானந்த தலைமை வகித்தார். அகமதிப்பீட்டு நிர்ணய குழு ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு வரவேற்றார். முதல்வர் வெங்கடேசன், குலபதி அத்யாத்மானந்த, ராஜபாளையம் உமாசங்கர் பேசினர். உதவி பேராசிரியர் ராமர் நன்றி கூறினார். துணை முதல்வர் கார்த்திகேயன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சஞ்சீவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.