திருப்பரங்குன்றம்- -திருப்பரங்குன்றம் கிரிவல பாதை மோசமாக உள்ளதால் பக்தர்கள், டூவீலர்களில் செல்வோர் சிரமம் அடைகின்றனர்.
கோயில் வாசலில் இருந்து அவனியாபுரம் பிரிவு வரை ஆங்காங்கே பிளாட்பாரம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அகற்றாவிட்டால் நிரந்தர ஆக்கிரமிப்பு ஆகிவிடும் என பா.ஜ., மேற்கு மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் வேல்முருகன் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தார்.