மதுரை-பொங்கல் விழாவை முன்னிட்டு 600 சிறப்பு பஸ்கள் கூடுதல் வழித்தடத்துடன் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குநர் ஆறுமுகம் தெரிவித்தார்.
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் சாலை பாதுகாப்பு பேரணியை துவக்கி வைத்து பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி அவர் பேசியதாவது: முக்கிய பஸ் ஸ்டாண்டுகளில் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கழகத்தில் உள்ள 40 பணிமனைகள் மூலம் 2300 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 10.61 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மகளிருக்கான கட்டணமில்லா பஸ்களில் 5 லட்சம் பேர் பயணிக்கின்றனர், என்றார்.
பொது மேலாளர்கள் ராகவன், சமுத்திரம், துணை மேலாளர்கள் அறிவானந்தம், ரவிக்குமார், முருகானந்தம், இணை இயக்குநர் பாஸ்கரன், பி.ஆர்.ஓ., சந்தான கிருஷ்ணன், போலீஸ் உதவி கமிஷனர்கள் மாரியப்பன், செல்வின், இன்ஸ்பெக்டர் கணேஷ்ராம் கலந்து கொண்டனர்.