மதுரை -மதுரை அமெரிக்கன் கல்லுாரி உடற்கல்வி துறை சார்பில் மினி மாரத்தான் போட்டியை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் துவக்கி வைத்தார்.
ஆடவர், மகளிருக்கான 5.5 கி.மீ., ஓட்டத்தில் 450 பேர் பங்கேற்றனர். ஆடவர் பிரிவில் முகேஷ் சர்மா முதலிடம், மதன்குமார் 2ம் இடம், சுசீந்திரன் 3ம் இடம், மாணவிகள் பிரிவில் நந்தினி முதலிடம், மகாலட்சுமி 2ம் இடம், யுவரஞ்சனி 3ம் இடம் பெற்றனர். துணை முதல்வர் மார்ட்டின் டேவிட், உடற்கல்வி இயக்குநர் பாலகிருஷ்ணன், பேராசிரியர்கள் பால்சேகர், ஜான் ஜெய காமராஜ் கலந்து கொண்டனர்.