பெரியகுளம்-பெரியகுளம் ஒன்றியம் கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட காவல் குடிசை- சுக்காம்பாறை ரோடு சீரமைக்காததால் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
கீழ வடகரை மேலப்புரவு விவசாயிகள் சங்கத்திற்கு உட்பட்ட சுக்காம்பாறை, கல்லாறு, கழுதை கட்டி ஆலமரம், வீரசின்னம்மாள் கோயில், கரும்பாறை பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா விவசாயம் செய்துள்ளனர்.
இப் பகுதிக்கு செல்லும் ரோடு குண்டும், குழியுமாக இருந்ததால், சில மாதங்களுக்கு முன் காவல் குடிசை முதல் சுக்கம்பாறை ரோடு வரை, பெரியகுளம் ஒன்றியம் சார்பில் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.08 கோடியில் 3.3 கி.மீ., தூரம் தார் ரோடு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரோடு பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு பழைய ரோடுகள் தோண்டப்பட்டது. ரோடு அமைக்க இருபுறங்களிலும் கற்கள் கொட்டப்பட்டு பல மாதம் ஆகிறது. ஆனால் ரோடு பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது மாமரங்களுக்கு மருந்தடிக்கும் பணிகளுக்கு விவசாயிகள் தோட்டத்திற்கு செல்வதற்கு டூவீலர், டிராக்டர் உட்பட அனைத்து வாகனங்களும் சிரமம் அடைகின்றனர். ரோட்டில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி டயர்கள் பஞ்சர் ஆகிறது. ரோடு சீரமைப்பு பணியை விரைவில் துவங்க வேண்டும்.-