தேனி-தேனி மாவட்டத்தில் 230 பொது இ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வருவாய்துறை சான்றிதழ்கள், சமூக பாதுகாப்புத் திட்டம், ஓய்வூதியம், பட்டாமாறுதல், சமூக நலத்துறை சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு வழங்கப்படும் கலப்புத்திருமண சான்றிதழ், இருப்பிடம், ஜாதி சான்று, ஓய்வூதியங்கள் உள்ளிட்ட 29 வகையான சான்றிதழ்கள் மக்கள் தங்கள் கணினி, அலைபேசியில் https://www.tnesevai.tn.gov.in./Citizen/ என்ற இணையதள முகவரியிலும், பட்டா மாறுதலுக்கு https://tamilnilam.tn.gov.in/Citizen/ என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.
சேவை கட்டணத்தை இணையதள வங்கி முறை, கிரெடிட்,டெபிட் அட்டைகள் மூலம் செலுத்தலாம். தனியார் கணினி மையங்கள், நகல் கடைகள் வியாபார நோக்கில் பயனாளரின் நுழைவு வசதியை வணிக நோக்கில் பயன்படுத்தக்கூடாது.
மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.