தேவாரம்-- -சபரிமலை சீசனையொட்டி மாவட்டத்தில் செண்டு பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் போடி, உப்புக்கோட்டை, சின்னமனூர், முத்தையன்செட்டிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் செண்டு பூக்கள் பயிரிட்டுள்ளனர். செண்டு பூக்கள் பனிப்பொழிவு அதிகரிக்கும் காலங்களில் கருகிவிடும். பனிப்பொழிவு இல்லாத காலங்களில் நன்கு விளைச்சல் இருக்கும். நடவு செய்த 6 மாதத்திற்குள் பூ பூக்க துவங்கும். இப் பூக்கள் மாலை கட்டுவதற்கு பயன்படும். 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் கோயில்கள் மூடப்பட்டது.
அதனால் இப்பூக்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டு கிலோ ரூ.15 விற்றது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட செண்டு பூக்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கூறுகையில் : செண்டு பூ கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனாவால் பூக்களை வெளியூர்களுக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில் சபரிமலை, தைப் பொங்கலையொட்டி விலையும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ. 50 முதல் ரூ.60 வரை விலை உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.