தேனி-தேனி மாவட்ட மாணவர்கள் மாநில கலைத்திறன் போட்டியில் 13 பேர் சாதனை படைத்துள்ளனர்.
தேனிமாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 463 மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்றனர். இதில் 13பேர் மாநில அளவில் வெற்றி பெற்றனர்.
தனி நபர் பிரிவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி காயத்ரி, டி.சுப்புலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி கிருத்திகா பிருந்தா கட்டுரைப்போட்டியிலும் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.
தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சிவராமன் மெல்லிசை போட்டியில் இரண்டாமிடமும், சருத்துப்பட்டி மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஜெகதீஷ் பறை இசைத்தல் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார்.
குழுப்பிரிவில் தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் நாத சங்கமம் வாத்திய இசை போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்தனர்.