நத்தம்--தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.ஒன்றிய, மாவட்ட,மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது.
நத்தம் தொகுதிக்குட்பட்ட கன்னியாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் சந்தோஷ் மிமிக்கிரியில் 3ம் இடமும், கணவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவன் முகமது இலியாஸ் நகைச்சுவை,பேச்சு போட்டியில் 2ம் இடமும், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மனோஜ் குமார் தனி பறை இசை போட்டியில் 3ம் இடமும், 7 மாணவிகள் கரகாட்ட குழு நடனப் போட்டியில் 2ம் இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் நேற்று சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன் பங்கேற்றனர்.