கொடைக்கானல்-- கொடைக்கானல் வன சுற்றுலா தலங்களுக்கு ஒருங்கிணைந்த கட்டணத்தை வனத்துறை அமல்படுத்தியது.வன சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடு, துாண் பாறை ஆகியவற்றிற்கு முன்னர் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதனால் போக்குவரத்து நெரிசலும், பயணிகள் அலைகழிக்கப்படும் நிகழ்வுகள் ஏற்படுவதாக வனத்துறை உணர்ந்தது.முறைப்படுத்துவதற்காக மோயர் சதுக்கத்தில் நான்கு பகுதிகளுக்கும் ஒரே டிக்கெட் முறையை அமல்படுத்தியது.
நான்கு சுற்றுலா தலங்களுக்கும் ரூ. 30 ஒரே இடத்தில் வசூலிக்கு நடைமுறை நேற்று அமலுக்கு வந்தது.
கேமராவிற்கு கட்டணம் வசூலிக்கப்படாத நிலையில் தற்போது கேமராவிற்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
திடீரென இது போன்ற நடைமுறையை ஏற்படுத்தியதால் சுற்றுலா பயணிகள் குழம்பினார்.
ரேஞ்சர் விஜயன் கூறியதானது: தற்போது ஒருங்கிணைந்த கட்டணம் அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல், பயணிகளின் அலைச்சல் தவிர்க்கப்படும்.
இக்கட்டணம் மூலம் இங்குள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும், நவீன கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.