பழநி-பழநி சண்முக நதி பாரத் வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 24வது ஆண்டு விழா இரு நாட்கள் நடந்தது.பள்ளியில் சிறந்த மாணவர்கள்,போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளான நடனம், சிலம்பம், பரதநாட்டியம், யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
நிர்வாக குழு தலைவர் வேலுச்சாமி, செயலர் குப்புசாமி, பள்ளி முதல்வர் லதா, துணை முதல்வர் நாகராஜன், நிர்வாக அதிகாரி சிவக்குமார், பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரி துணை பேராசிரியர் கோமதி, முன்னாள் டி.ஜி.பி., ரவி பங்கேற்றனர்.