வேடசந்துார்- -வேடசந்துார் சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் 40,இவரது வீட்டில் 43 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் முகமூடி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேடசந்துார் சாலையூர் நால் ரோட்டை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் 40,இவரது வீட்டில் 43 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் முகமூடி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 10 பேரை போலீசார் கைது செய்து 21 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் அதே வழக்கில் தொடர்புடையவர்கள் அஞ்சலி பைபாஸ் ரவுண்டானா அருகே காரில் செல்வதாக கிடைத்த தகவலில் வேடசந்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சந்தேகத்தின் அடிப்படை யில் சென்ற காரை மடக்கினர்.
அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கணேஷ் குமார் 45, தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பாலசுப்பிரமணி (எ) பாலன், கேரளா திருவனந்தபுரம் மணக்காட்டை சதீஷ் 27, கேரளா ஆலப்புழா கயத்தோட்டை கிரீம் 42, கேரளா கண்ணுார் கிரீஸ் 48, ஆகிய ஐவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கார், ஆயுதங்கள்,8 அரை பவுன் தங்க நகை, ரூ.73 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 16 நபர்களில் 15 பேர் கைது செய்தநிலையில் மேலும் ஒருவரை வேடசந்துார் போலீசார் தேடி வருகின்றனர்.