சாணார்பட்டி-- நத்தம் முத்துகோவில்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக் 31.இவர் நத்தம் குட்டுப்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் அலைபேசி மூலம் பழகி ஏமாற்றியதாக சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
நத்தம் அருகே முத்துகோவில்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்திக் 31.திருமணமான இவர் திருப்பூரில் தங்கி வேலை செய்கிறார்.இந்நிலையில் நத்தம் குட்டுப்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுடன் இவருக்கு அலைபேசி மூலம் பழக்கம் ஏற்பட்டது. திருப்பூரிலிருந்து தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்தார்.கார்த்திக் தனக்கு திருமணமானதை மறைத்து அப்பெண்ணுடன் பழகி வந்தார்.ஜன. 9ல் தனிமையில் சந்திக்கலாம் என கார்த்திக் இளம்பெண்ணை கோபால்பட்டிக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொள்வோம் என கூறி ஏமாற்றினார். சாணார்பட்டி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லுார்துமேரி கார்த்திக்கை கைது செய்தார்.