புதுடில்லி: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான, 'இன்டர்ன்ஷிப்' எனப்படும் பயிற்சியை முடிப்பதற்கான, 'கட் ஆப் தேதியை மத்திய சுகாதார அமைச்சகம், வரும் ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. ஏற்கனவே இதற்கான கட் ஆப் தேதி, மார்ச் 31 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள் வலியுறுத்தியதை அடுத்து, கட் ஆப் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கட் ஆப் தேதி நீட்டிக்கப்பட்டது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement