பழநி--பழநி பாலாறு பொருந்தலாறு அணை கட்டுமான பணியின் போது தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான 200 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.
அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இழப்பீடுத் தொகை அதிகரித்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பிட்ட தொகை செலுத்திவிட்டு மீதமுள்ள தொகை வழங்காததால் நீதிமன்றம் பழநி ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.
நீதிமன்ற ஊழியர்கள் பழநி ஆர்.டி.ஓ அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர்.
இதனையடுத்து ஆர்.டி.ஓ., அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு பின் கோர்ட் ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.