மதுரை : சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஒரு கூடுதல் பொங்கல் சிறப்புரயில்இயக்கப்படுகிறது.
தாம்பரம் -- திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் (06049) நாளை (ஜன., 14) தாம்பரத்திலிருந்து இரவு 10:20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9:00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.
மறு மார்க்கத்தில் திருநெல்வேலி -- தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (06050) திருநெல்வேலியில் இருந்து ஜன.,18 மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்துார், கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8:00மணிக்குதுவங்குகிறது.