கோவை : பஸ்சில் சென்ற இரண்டு பெண்களிடம், நகை மற்றும் பணம் திருட்டு போனது.
சின்ன தடாகம் அருகேயுள்ள மாத்துார் புதுாரை சேர்ந்த நித்யா,32, தனியார் டவுன் பஸ்சில், பெரிய கடை வீதிக்கு பொருட்கள் வாங்க வந்தார். பிரகாசம் ஸ்டாப்பில் இறங்கியபோது, அவரது பேக்கை காணவில்லை.
அதில், மூன்று பவுன் தங்கச்செயின், 52,000 ரூபாய் ரொக்கம், மொபைல் போன் இருந்தது. கூட்ட நெரிசலில், அவர் வைத்திருந்த பேக்கை யாரோ திருடிச் சென்றுள்ளனர்.
அதேபோல், புலியகுளம், பஜார் வீதியை சேர்ந்த கமலம்,62, என்பவர், தடம் எண்: 2, அரசு பஸ்சில் சென்றார்.
லட்சுமி மில் ஸ்டாப்பில் இறங்கி பார்த்தபோது, அவர் அணிந்திருந்த, இரண்டு பவுன் நகை திருட்டு போயிருந்து தெரியவந்தது. பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.