நீங்கள் உங்கள் பாதத்தைத் தினந்தோறும் மஜாஜ் செய்வதனால், தூக்கத்தை அதிகரிப்பது முதல் பார்வையை மேம்படுத்துவது வரை சில அற்புதமான நன்மைகளைப் பெறலாம்.
நமது பாதங்களில் இதயம், நுரையீரல் கழுத்து எனப் பலவிதமான புள்ளிகள் உள்ளன. இதனால் பாதத்தில் மஜாஜ் செய்யும் போது, வலி, சோர்வு ஆகியவை நீங்கி உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.
பார்வை திறன் அதிகரிப்பு
![]()
|
நமது கண்களுடன் தொடர்புடைய நான்கு முக்கிய புள்ளிகள் நம் கால்களில் உள்ளன. இதனால் கால்களைத் தவறாமல் மசாஜ் செய்வது மூலம் பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நம் கண்களை அமைதிப்படுத்துகிறது.
உடலை நிலை நிறுத்தும்
![]() Advertisement
|
நமது பாதங்கள் நாம் பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகள் ஆகும். அவற்றைக் கவனித்து மசாஜ் செய்வது நம்மைப் பூமியில் உடலை நிலைநிறுத்த உதவுகிறது.
ஆழ்ந்த உறக்கம்
![]()
|
பாதங்களில் மஜாஜ் செய்வதன் மூலம் சோர்வடைந்த கால்களைத் தளர்த்துவது மட்டுமல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகும் மனதையும் அமைதிப்படுத்துகிறது. ஒரு நல்ல பாத மசாஜ் உங்களை மாத்திரையை விட வேகமாகத் தூங்க வைக்கும்.
கால்கள் ஆரோக்கியம்
![]()
|
பாதங்களை மஜாஜ் செய்வதன் மூலம் கால் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் கால்களின் மூட்டுகள் மற்றும் தசைகளைப் பலப்படுத்துகிறது.
மஜாஜ் செய்யும் முறை
![]()
|
சிறிது வெதுவெதுப்பான எண்ணெய்யை எடுத்து, உங்கள் பாதங்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். கால் விரல்களிலிருந்து தொடங்கி கீழே நகரவும். இதற்கு நல்லெண்ணெய் அல்லது வல்லாரை எண்ணெய்யை மீதமான சூட்டில் பயன்படுத்தவும்.பாதங்களில் காயங்கள், வெட்டுக்கள், கீறல்கள் அல்லது கடுமையான தொற்று இருக்கும் போது மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும்.