12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : ஜன 13, 2023 | Added : ஜன 13, 2023 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (13.1.2023 - 19.1.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சூரியன் நன்மை வழங்குவார். சூரிய வழிபாடு நன்மை அளிக்கும்.அசுவினி : வாரத்தின் முதல் இரண்டு நாளும் சிந்தித்து செயல்பட்டு லாபம் காண்பீர். ஞாயிறு,திங்களில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செவ்வாய்,புதனில் சில சங்கடத்தை
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் கன்னி,  விருச்சிகம்,  தனுசு, மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (13.1.2023 - 19.1.2023) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம்


சூரியன் நன்மை வழங்குவார். சூரிய வழிபாடு நன்மை அளிக்கும்.


அசுவினி : வாரத்தின் முதல் இரண்டு நாளும் சிந்தித்து செயல்பட்டு லாபம் காண்பீர். ஞாயிறு,திங்களில் உங்கள் எண்ணம் நிறைவேறும். செவ்வாய்,புதனில் சில சங்கடத்தை எதிர்கொள்வீர்.


பரணி : வெள்ளி, சனிகிழமைகளில் உங்கள் முயற்சிக்கு ஏற்ப லாபம் உண்டாகும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவீர். ஞாயிறு, திங்களில் சுறு சுறுப்பாக செயல்படுவீர். செவ்வாய் முதல் வியாழன் காலை வரை செயல்களில் சிரமம் ஏற்படும்.


கார்த்திகை 1ம் பாதம் : பெரும்பாலான கிரகம் உங்களுக்கு சாதகமான நிலையில் இல்லை என்றாலும் ஞாயிறு முதல் சூரியனால் நன்மை அடைவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செவ்வாய் முதல் வியாழன் காலை வரை முயற்சி இழுபறியாகும்.


சந்திராஷ்டமம்

17.1.2023 காலை 8:05 மணி - 19.1.2023 காலை 11:52 மணி
ரிஷபம்


கேது, புதன், சுக்கிரன், சனி, குரு நன்மைகளை வழங்குவர். மகாலட்சுமி வழிபாடு வளம் தரும்.


latest tamil news


கார்த்திகை 2, 3, 4: வெள்ளி,சனி கிழமைகளில் உங்கள் செயல்களில் அதிக உழைப்பு தேவைப்படும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். ஞாயிறு முதல் வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.


ரோகிணி : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும் வாரம் இது. அரசு வழியில் இழுபறியாக இருந்து வந்த வேலைகளை முடிப்பீர்கள். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சி லாபம் தரும். வியாழன் மதியத்திற்கு மேல் செயல்களில் எச்சரிக்கை அவசியம்


மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த வேலை முடிவிற்கு வரும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிதிநிலை உயரும்.


சந்திராஷ்டமம்

19.1.2023 காலை 11:53 மணி - 21.1.2023 மதியம் 2:30 மணி
மிதுனம்


ராகு, சுக்கிரன், நன்மைகளை வழங்குவர். விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.


மிருகசீரிடம் 3, 4 : பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இல்லை என்றாலும் லாப ராகுவும், மனக்காரகன் சந்திரனும் உங்களை வெற்றிநடை போட வைப்பார்கள். உங்கள் முயற்சி ஆதாயமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் கூடும்.


திருவாதிரை : வெள்ளி, சனி கிழமைகளில் இழுபறியாக இருந்து வந்த வேலை நிறைவேறும். ஞாயிறு, திங்களில் பண வரவில் இருந்து வந்த தடை அகலும். புதன், வியாழனில் சிந்தித்து செயல்படுவதால் எதிர்பார்த்தவற்றில் நன்மைகளைக் காண முடியும்.


புனர்பூசம் 1, 2, 3: உங்கள் எண்ணங்களில் ஒன்று இந்த வாரம் எளிதாக நிறைவேறும். தீராமல் இருந்த பிரச்னைகளில் தீர்வு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும்.
கடகம்


புதன், குரு, செவ்வாய் நன்மைகளை வழங்குவர். நவகிரகங்களை வழிபட சங்கடம் விலகும்.


புனர்பூசம் 4 : லாபஸ்தான செவ்வாயால் முயற்சி வெற்றியாகும். குருவின் பார்வையால் செல்வாக்கு அதிகரிக்கும். வெள்ளி, சனிகிழமையில் உங்கள் திறமை வெளிப்படும். ஞாயிறு, திங்களில் செயல்களில் கவனம் தேவை. செவ்வாய் முதல் முயற்சி லாபமாகும்.


பூசம் : வெள்ளி, சனி கிழமைகளில் குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். ஞாயிறு, திங்களில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செவ்வாய் முதல் எதிர்பார்த்த பணம் வரும். வழக்குகளில் சாதகமான நிலையை அடைவீர்கள்.


ஆயில்யம் : உங்கள் திறமை வெளிப்படும் வாரம் இது. நீங்கள் நினைத்ததை அடைவீர். உங்கள் செயல்கள் வெற்றியாகும். தொழில், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.
சிம்மம்


கேது, சனி, சூரியன் நன்மைகளை வழங்குவர். திருச்செந்தூர் முருகனை மனதில் எண்ணி செயல்பட நன்மை அதிகரிக்கும்.


latest tamil news


மகம்: வெள்ளி, சனி கிழமைகளில் வரவு செலவில் கவனம் தேவை. ஞாயிறு, திங்களில் முயற்சி வெற்றியாகும். செவ்வாய் முதல் உங்கள் செயல்கள் தெளிவாகும். வருமானம் அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சிகளில் லாபம் காண்பீர்.


பூரம் : இந்த வாரம் உங்கள் எண்ணம் எளிதாக நிறைவேறும். உடல்நிலையில் இருந்து வந்த சங்கடம் தீரும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவு வரும்.


உத்திரம் 1 : மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் ஞானக்காரகனால் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ஆயுள் காரகனும், ராசி நாதனும் உங்கள் நிலையை உயர்த்துவார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். வழக்கு உங்களுக்கு சாதகமாகும்.
கன்னி


புதன், சுக்கிரன், குரு நன்மைகளை வழங்குவர். ரங்கநாதரை மனதில் எண்ணி வழிபடுங்கள்.


உத்திரம் 2, 3, 4: வெள்ளி சனி கிழமைகளில் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி பயனளிக்கும். ஞாயிறு, திங்களில் குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர். நினைத்ததை செய்வீர்கள். புதிய முயற்சி பலிதமாகும்.


அஸ்தம் : வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் அலைச்சல் அதிகரிக்கும். ஞாயிறு, திங்களில் பண வரவு உண்டாகும் செவ்வாய் முதல் உங்கள் செயல்களில் மாற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடைவீர்.


சித்திரை 1, 2 : ஏழாமிட குருவின் பார்வைகளால் உங்கள் விருப்பம் நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிக்கு ஏற்ற பலன் உண்டாகும். செலவுகள் அதிகரித்தாலும் அதற்கு ஏற்ப வரவு உண்டாகும். விரும்பியதை அடைவீர்.
துலாம்


சுக்கிரன்,சந்திரன் நன்மையை வழங்குவார். விநாயகரை வழிபட வளமும் நலமும் அதிகரிக்கும்.


சித்திரை 3, 4 : பிரதான கிரகங்கள் உங்களுக்கு சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வருவீர்கள். வெள்ளி, சனிக்கிழமைகளில் எதிர்பாராத செலவு ஏற்படும். ஞாயிறு முதல் உங்கள் முயற்சிக்கு ஏற்ப லாபம் உண்டாகும்.


சுவாதி: ஞான மோட்ச காரகன் உங்கள் ராசியில் அமர்ந்திருப்பதால் புதிய படிப்பினை கற்றுக்கொள்வீர்கள். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும். வெள்ளி, சனிகிழமைகளில் செயலில் தடுமாற்றமும் செலவுகளும் உண்டாகலாம் என்பதால் கவனம் தேவை.


விசாகம் 1, 2, 3 : கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஒரு சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சியில் ஒருசிலர் ஈடுபடுவீர். அரசாங்க வழியில் நன்மை அதிகரிக்கும். வெள்ளி சனிகிழமைகளில் அலைச்சல் அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும்.
விருச்சிகம்


சூரியன், சனி சுக்கிரன், குரு, ராகு நன்மைகளை வழங்குவர். வராகியை வழிபட சங்கடம் தீரும்.


விசாகம் 4: வெள்ளி சனி கிழமைகளில் உங்கள் செயல் லாபத்தை உண்டாக்கும். ஞாயிறு திங்களில் செலவு அதிகரிக்கும். செவ்வாய்முதல் தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்.


அனுஷம் : நினைத்ததை அடையும் வாரம் இது. உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த தடை விலகும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள். ஞாயிறு, திங்களில் பண விஷயத்திலும் செலவுகளிலும் கவனம் தேவை.


கேட்டை: உங்கள் விருப்பம் தடையின்றி நிறைவேறும் வாரம் இது. நீண்ட நாள் முயற்சி ஒன்று லாபம் தரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். சகோதர வழியினரால் நன்மை உண்டு. ஞாயிறு, திங்களில் அலைச்சலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாவீர்கள்.
தனுசு


கேது, சுக்கிரன் நன்மையை வழங்குவர். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி வழிபட நன்மை உண்டாகும்


மூலம் : வெள்ளி முதல் திங்களுக்குள் உங்கள் எண்ணம் நிறைவேறும். தொழில் லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். எதிர்பார்த்த நன்மை உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். செவ்வாய் முதல் செயல்களில் கவனம் தேவை.


பூராடம்: உங்கள் முயற்சி வெற்றி அடையும் வாரம் இது. தடைபட்டிருந்த வருமானம் வந்து சேரும், அரசு வழியில் லாபம் அதிகரிக்கும். நீங்கள் ஈடுபடும் செயலில் வெற்றி காண்பீர்கள். பொருளாதார நெருக்கடி விலகும். சொத்துப் பிரச்னை முடிவிற்கு வரும். செவ்வாய், புதனில் செலவு பல வழியிலும் உண்டாகும்.


உத்திராடம் 1: ஞான காரகனால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை ஒன்றை சுமூகமாக தீர்த்து வைப்பீர்கள். வாரத்தின் பிற்பகுதியில் அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.
மகரம்


சந்திரன், சுக்கிரன் நன்மையை வழங்குவர். சனீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.


உத்திராடம் 2, 3, 4 : முயற்சிகளால் வெற்றிபெற வேண்டிய வாரம் இது. உங்கள் செயல்கள் லாபத்தில் முடியும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை விலகும். பண வரவு அதிகரிக்கும். விலகிச் சென்றவர் மீண்டும் உங்களைத் தேடி வருவர். வியாழன் மதியம் முதல் திடீர் செலவு தோன்றும்.


திருவோணம் : ராசி நாதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் நிலை உயரும். பொது இடத்தில் செல்வாக்கு வெளிப்படும். உங்கள் செயலில் முன்னேற்றம் உண்டாகும். தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள். வாரத்தின் கடைசி நாளில் எதிர்பாராத செலவு தோன்றும்.


அவிட்டம் 1, 2 : உங்கள் ராசி நாதன் ஆட்சி பெற்றுள்ள நிலையில் சுக்கிரனும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புதிய முயற்சி, அரசு வழியில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் லாபமாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.
கும்பம்


குரு, ராகு, புதன் நன்மைகளை வழங்குவர். சிவனை வழிபட சங்கடம் தீரும்.


அவிட்டம் 3, 4: வெள்ளி சனிகிழமைகளில் உங்கள் முயற்சியில் தடைகளை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும். ஞாயிறு முதல் மாற்றம் உண்டாகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு லாபம் காண்பீர்கள். நினைத்ததை செயல்படுத்துவீர்கள்.


சதயம் : மூன்றாமிட ராகுவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்ப்பு மறையும். வழக்கு சாதகமாகும். அதிகரிக்கும் என்றாலும் வெள்ளி சனியில் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் விழிப்புணர்வு அவசியம். ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பயணத்திலும் பணத்திலும் எச்சரிக்கைத் தேவை.


பூரட்டாதி 1, 2, 3: வாரத்தின் முதல் நாளில் போராடி வெல்வீர்கள். சனிக்கிழமை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை ஒத்தி வையுங்கள். ஞாயிறு முதல் மீண்டும் உங்கள் பணி வேகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.


சந்திராஷ்டமம்

12.1.2023 மாலை 6:14 மணி - 15.1.2023 நள்ளிரவு 2:20 மணி
மீனம்

சனி, சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் நன்மையை வழங்குவர். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.


பூரட்டாதி 4 : வாரத்தின் முதல் இரண்டு நாட்களும் உங்கள் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள் என்றாலும் ஞாயிறு, திங்களில் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். ஆரோக்யத்தில் சங்கடம் ஏற்படும். திங்கள் முதல் நிலைமை சீராகும்.


உத்திரட்டாதி : லாப சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்யத்தில் கூடுதல் அக்கறை செலுத்துங்கள். வெள்ளி சனிகிழமைகளில் சந்திரன் நன்மைகளை வழங்கினாலும் ஞாயிறு, திங்களில் சந்திராஷ்டமம் என்பதால் முயற்சிகளில் தடை உண்டாகும். அதன்பின் நிலைமை சீராகும்.


ரேவதி : மூன்றாமிட செவ்வாயால் முன்னேற்றம் அதிகரிக்கும். வெள்ளி சனிகிழமைகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிர்ப்புகளை சமாளிப்பீர். ஞாயிறு, திங்களில் நெருக்கடிகளுக்கு ஆளாவீர்கள். செவ்வாய் முதல் உங்கள் செயல்கள் லாபமாகும். அரசு வழியில் நன்மை உண்டாகும்.


சந்திராஷ்டமம்

15.1.2023 நள்ளிரவு 2:21 மணி - 17.1.2023 காலை 8:04 மணி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X