சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள 6 ட்ரோன் இயந்திரங்கள் மற்றும் 200 கைத்தெளிப்பான்களை அமைச்சர்கள் வழங்கினர். ரிப்பன் மாளிகையில் நட்நத இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியன் மற்றும் சேகர் பாபு மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினர். மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷ்னர் ககன் தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.