ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா நஞ்சை ஊத்துக்குளி அம்மன் கோயில் அருகே பெரியக்காண்டி ஸ்ரீவாரி கார்டன் ஸ்டார் சிட்டியை சேர்ந்த சண்முகம் மகன் வடிவேல்(38). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
எல்லை பாதுகாப்பு படை வீரராக பதினெட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திரிபுராவில் பணியில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் கோவைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
காஷ்மீரில்
மதுரை டி.கல்லுப்பட்டி அருகே காடனேரியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(40). இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும், பிரபாகரன் மற்றும் விஷ்ணு என்ற இரு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணசாமி, காஷ்மீரில் ராணுவத்தில் ஹவில்தாராக பணிபுரிந்தார்.
உடல்நிலை சரியில்லாமல் ராணுவ முகாமில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று(ஜன.,12) உயிர் இழந்தார். அவரது உடல் ராணுவ விமானத்தில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.