46வது சென்னை புத்தகக் காட்சி ஜனவரி 6 அன்று கோலாகலமாகத் துவங்கியது. தினம் ஒரு நிகழ்வுடனும், புதிய புத்தக வெளியீடுகளுடன் அரங்கம் களைகட்டுகிறது. இன்றைய நிகழ்ச்சியாக 'நினைத்ததை நிகழ்த்திடுவோம்'என்ற தலைப்பில் ஈரோடு மகேஷூம், 'நம்மைச் செதுக்கிய புத்தகங்கள்' என்ற தலைப்பில் புதுகை ச.பாரதியும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
பபாசி
எனும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில்
ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்படுகிறது. தமிழக அளவில்
மிகப்பெரிய அளவிலான புத்தகக் காட்சியாக இது விளங்குகிறது. ஏராளமான
வாசகர்கள், எழுத்தாளர்கள் சங்கமிக்கும் நிகழ்வு இது. அந்த வகையில் ஜன., 6
அன்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 46வது புத்தகக் காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
![]()
|
தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் உரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜன., 13) ஈரோடு மகேஷ் மற்றும் புதுகை ச.பாரதி சிறப்புரை ஆற்ற உள்ளனர். மாலை 6.00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும்.