ஆத்துார், ஜன. 13-
ஆத்துார், கல்லாநத்தம், தெற்கு தெருவை சேர்ந்த, கணேசன் மனைவி தேன்மொழி, 29. இவரது வீட்டில் நேற்று மாலை, 6:00 மணிக்கு, ப்ரிட்ஜ் தீப்பிடித்து எரிந்தது. ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் தடுத்தணைத்தனர். ஆனால் ப்ரிட்ஜ் எரிந்து நாசமானது. விசாரணையில், மின் கசிவால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது. ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் தேவியாக்குறிச்சி, ஏரிக்காட்டை சேர்ந்தவர் மணி, 50. இவரது கரும்பு தோட்டத்தில் நேற்று மதியம், 1:30 மணிக்கு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதில், 1.5 ஏக்கரில் கரும்பு எரிந்து நாசமானது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோழி பண்ணை
காரிப்பட்டி அருகே செல்வம் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணை உள்ளது. அங்கு நேற்று மதியம், 2:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. வாழப்பாடி தீயணைப்பு துறையினர், தீயை அணைத்தனர். கோழிக்குஞ்சுகள், கால்நடைகள் காயமின்றி தப்பின.
மேலும் சேலம், நெத்திமேடு கரட்டின் உச்சியில் நேற்று மாலை, 4:30 மணிக்கு மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.