ஈரோடு, ஜன. 13-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, வாக்காளர் பட்டியல் பணி குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, பாலு, முன்னாள் அமைச்சர் ராமசாமி, பகுதி செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் பேசியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் துர்திஷ்டவசமானது என்றாலும், எதிர்கட்சி தலைவர் பழனிசாமி கைகாட்டும் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம். தி.மு.க., அரசு தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. கடந்த அ.தி.மு.க., அரசு கொண்டு வந்த திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். மின் கட்டணம், சொத்து வரி, குப்பை வரி, பால் விலை என பலவும் உயர்ந்து விட்டன. இதுபற்றி மக்களிடம் எடுத்து சொல்லுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.