குளித்தலை, ஜன. 13-
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ளபாலகுஜாம்பாள் திருமண மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இக்கோவில் காசிக்கு அடுத்தாற்போல் சிறப்பு வாய்ந்த தலமாக திகழ்ந்து வருகிறது. கடம்பவனநாதரை தரிசிக்க, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடம்பர் கோவில் வளாகத்தில் பாலகுஜாம்பாள் திருமண மண்டபமும் உள்ளது. இங்கு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த வாடகை கட்டணம் செலுத்தி, பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மண்டபம், திருத்தேரின் சாமான்கள் பாதுகாப்பு அறையாக பயன்
படுத்தப்பட்டு வருகிறது.
எனவே, பாலகுஜாம்பாள் மண்டபத்தை மீண்டும் ஏழை, எளிய மக்கள் சுப நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளும் வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர, இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.