குளித்தலை, ஜன. 13-
குளித்தலை அருகே, ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 800 காளைகளின் உரிமையாளர்களும், 400 காளையர்களும் முன்
பதிவு செய்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,
ஆர்.டி.மலையில் கிராம மக்கள் சார்பில், 61ம் ஆண்டு ஜல்லிகட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்ளும் காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்களும், காளைகளுக்கு அடக்க வீரர்களும் முன்பதிவு நேற்று நடந்தது.
இதில் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலுார், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் திரளாக குவிந்தனர். நேற்று மதியம் 2:00 மணிக்குள், 800 காளைகளுக்கும், 400 வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டன.