பேஷன் துறை உலகெங்கும் அதிக லாபம் ஈட்டும் துறையாக சமீப காலங்களில் வளர்ந்து வருகிறது. இதில் சஸ்டைனபிள் பேஷன் என்னும் பேஷன் வகை தற்போது உலகப் புகழ்பெற்று வருகிறது. பேஷன் உடைகள், மேக் அப் பொருட்கள் மற்றும் ஆக்சஸரிக்களைத் தயாரிக்க பல்வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பயன்பாடு முடிந்ததும் இவை கழிவுகளாக வெளியே கொட்டப்படுகின்றன.
![]()
|
இயற்கைக்குத் தீங்கு விளைவிக்காத பொருட்களைக் கொண்டு பேஷன் துறை இயங்கினால் இந்த பேஷன் கழிவுகளால் நிலம், ஏரி, கடல் உள்ளிட்டவை மாசுபடாமல் இருக்கும் என்கிற கருத்து காலப்போக்கில் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து உருவானதுதான் 'சஸ்டைனபிள் பேஷன்' என்கிற முற்றிலும் இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பேஷன் வகை.
பேஷன் நிகழ்ச்சிகள், டிவி ஷோக்கள் என வெகுவிரைவில் சஸ்டைனபிள் பேஷன் டிரெண்டாகியது. இந்த விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து மாடல்களும் இயற்கைக்கு மாசு விளைவிக்காத உடைகள் மற்றும் ஆக்ஸசரிக்களை மட்டுமே அணிவர். பேஷன் ஆடைகளை உருவாக்கும் ஆடை வடிவமைப்பாளர்களும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவர்.
![]()
|
சஸ்டைனபிள் பேஷனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது பிரிட்டனின் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஐடிவி ஓர் விஷயத்தைச் செய்துள்ளது. ஐடிவியில் கடந்த 2015 ஆம் ஆண்டு துவங்கி தற்போதுவரை பல சீசன்களாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி பேஷன் நிகழ்ச்சி லவ் ஐலாண்ட். இந்த நிகழ்ச்சி நம்மூர் பிக் பாஸ் போன்றதுதான். ஆனால் இதில் கலந்துகொள்ளும் மாடல்கள் தங்கள் பேஷன் திறமைகளை வெளிக்கொணர்ந்து பரிசுத்தொகையை தட்டிச் செல்வர். ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்த ரியாலிட்டி ஷோ கடந்த 7 ஆண்டுகளில் பிரபலமடையத் தொடங்கியது.
![]()
|
லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் சஸ்டைனபிள் பேஷனை ஊக்குவிக்கும் வகையில் எதிர்வரும் எபிசோடுகள் அமைய உள்ளதாகவும் இதில் கலந்துகொள்ளும் பெண்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்பர் எனவும் ஐடிவி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது சமூக வலைதளங்களில் இயற்கை நல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement