சென்னை: தமிழக சட்டசபையில் இன்று (ஜன.,13) தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாமல், அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் டி.என்.பி.எஸ்.சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது.