கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் பாலின வேறுபாடு அடிப்படையில் சார், மேடம் என்று அழைப்பதற்கு பதில், மாணவர்கள் இனி பொதுவாக 'டீச்சர்' என அழைக்கலாமென அம்மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
கேரளாவில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்களை பாலின வேறுபாடு அடிப்படையில் 'சார்' மற்றும் 'மேடம்' என்று அழைக்கும் போது ஏற்படும் பாகுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த கேரள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார், உறுப்பினர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர் என்ற வார்த்தையைப் பயன்படுத்த அறிவுறுத்துமாறு பொதுக்கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'சார்' அல்லது 'மேடம்' போன்ற மரியாதைக்குரிய வார்த்தைகளை விட 'ஆசிரியர்' என்பது பாலின அடிப்படையில் நடுநிலையான சொல்லாக உள்ளது.
![]()
|
'ஆசிரியர்' என்ற பொதுவான சொல் , ஆசிரியர்களையும் மாணவர்களையும் மேலும் நெருக்கமாக்கும். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக 2 மாதங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொதுக் கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement