வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: நித்யானந்தாவின் கைலாசா நாட்டை அங்கீகரித்த அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், தான் கைலாசா நாட்டில் இருப்பதாக கூறியிருந்தார். அதாவது, தனியாக ஒரு தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயர் சூட்டி, தனி பாஸ்போர்ட், பணம், வங்கி என அனைத்து சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில், உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் நெவார்க் நகரம், கைலாசா நாட்டை அங்கீகரித்து இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

கைலாசா நாட்டை அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம், இறையான்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது. இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்தாகியுள்ளது.
நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாசைக் ஆற்றின் முகப்பில் அதன் இருப்பிடம் (அது நெவார்க் விரிகுடாவில் கலக்கிறது) அமைந்துள்ளதால் இந்த நகரம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது.
நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமானது அமெரிக்காவின் முதல் முனிசிபல் வணிக விமான நிலையமாகும், இன்று அது முக்கியமான விமான நிலையங்களுள் ஒன்றாகும்.