வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின் படி பழைய ஒய்வூதிய திட்டத்திற்கு ஹிமாச்சல் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
ஹிமாச்சல பிரதேச சட்டசபைக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 ல் வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு ஹிமாச்சலின் 15வது முதல்வராக கடந்தாண்டு டிசம்பரில் பதவியேற்றார். அவருடன் 12 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவியேற்றனர்.
![]()
|
இந்நிலையில் இன்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மாநிலத்தில் பழைய ஒய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது. பழைய ஒய்வூதிய திட்டத்தின் கீழ் 1.36 லட்சம் ஒயவூதியதாரர்கள் பயனடைவர் என கூறப்படுகிறது.