அறிவியல் ஆயிரம்
கண் கவரும் பவளப்பாறை
நிலத்தில் இருப்பது போலவே கடலிலும் பல்லுயிரிய அமைப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் பவளப்பாறைகள் முக்கியமானது. 'பவளம்' எனும் ஒரு வகை கூட்டுயிரிகள் சுரக்கும் சுண்ணாம்புப் பிணைப்புகளால், பவளப்பாறைகள் உருவாகின்றன. பார்ப்பதற்கு அழுத்தமான சுண்ணாம்புச் செடிகளின் தொகுப்பு போல இவை இருக்கும். இந்தத் தொகுப்புகளோடு பல வகையான நுண்ணுயிரிகள் ஒட்டி வளர்ந்து பவளப்பாறைகளின் தன்மையை நிர்ணயிக்கின்றன. இவை பல வண்ணங்களில் இருப்பதால் கண் கவரும் பூஞ்சோலை மாதிரி தெரியும்.
தகவல் சுரங்கம்
பெரிய மூளை
தரையில் வாழும் விலங்குகளில் பெரிய மூளை உள்ளது யானை. எடை 5 கிலோ இருக்கும். இவற்றுக்கு நினைவாற்றல் அதிகம். யானைகளில் ஆப்ரிக்க புதர்வெளி, ஆப்ரிக்க காடு, ஆசிய யானை என மூன்று வகைகள் உள்ளன. இதன் தும்பிக்கை 60 ஆயிரம் தசை நார்களால் ஆனது. 10 லிட்டர் தண்ணீரை ஒரே மூச்சில் உறிஞ்சி விடும். இதன் கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர, தாவ முடியாது. ஆசிய யானைகளின் தந்தங்கள் 10 அடி வளரும். உடல் வெப்பநிலையை சீராக வைக்க, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதுகளை எந்நேரமும் ஆட்டிக்கொண்டே
இருக்கின்றன.