வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில் பணிக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வந்த 64 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
பீஹார் மாநிலம் அராரியா, அவுரங்காபாத், பங்கா, பகல்பூர், போஜ்பூர், தர்பங்கா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை அரசு மருத்துவர்கள் சிலர் பணிக்கு வராமல் உரிய காரணமின்றி அடிக்கடி விடுப்பு எடுத்து வருவதாக புகார்கள் எழுந்தன.
![]()
|
மாவட்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு 64 மருத்துவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. உரிய பதில் இல்லாததால், இதனை அறிக்கையாக அரசின் கவனத்திற்கு அனுப்பி வைத்தது.
இது தொடர்பாக இன்று முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 64 மருத்துவர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்பட்டது.