மும்பை:வங்கி, காப்பீடு, போன்ற துறைகளில் பணியாற்றும் 'ஒயிட் காலர்' பணிகளுக்கான வேலைவாய்ப்பு, கடந்த டிசம்பரில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
'ஒயிட் காலர்' பணிகளுக்கான வேலைவாய்ப்பு, கடந்த ஆண்டு டிசம்பரில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ல், பல துறைகளில் நிலையான வளர்ச்சி காணப்பட்டது. ஆனால், 2022ம் ஆண்டு இரண்டாம் பாதியில், இது கலவையாக மாறியது.
அதாவது உள்நாட்டு பொருளாதாரம் சார்ந்த துறைகள், வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தன.
உள்நாட்டு பொருளாதாரம் சார்ந்த துறைகள் மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களின் வளர்ச்சி ஆகியவை ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறைகளில் காணப்பட்ட மந்தநிலையை ஈடுகட்டியுள்ளது.
இதன் காரணமாக, பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த அளவில் தொடர்ச்சியான நிலைத்தன்மை ஏற்பட்டது.
கடந்த ஆண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும் போது, அந்த ஆண்டின் டிசம்பரில், 'இன்சூரன்ஸ்' துறைக்கான வேலைவாய்ப்பில் 51 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாறாக ஐ.டி., துறையில் 19 சதவீதம் மற்றும் பி.பி.ஓ., துறையில் 9 சதவீதம் அளவுக்கு வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளன.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.